இரத்தக் களறியாகும் கொழும்பு! சர்வதேச நாடுகள் வெளியேறும் ஆபத்து - குருசுவாமி சுரேந்திரன்(Video)
நாடு வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது என்றும் அதற்கு ஒரு சிலர் காரணம் என்றும் அவர்கள் பதவி விலக வேண்டும் என்றும் தெரிவித்து ஆக்ரோஷமான போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் கொழும்பு முழுவதும் இரத்தக்களறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது என முன்னாள் வங்கி முகாமையாளரும், பொருளாதார ஆலோசகருமான குருசுவாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
போராட்டக்காரர்களை உசுப்பேற்றும் விதமாக அரசியல்வாதிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தங்களது இருப்பை பாதுகாக்கவும், போராட்டக்காரர்களிடம் கைத்தட்டல் வாங்கவும் சில அரசியல்வாதிகள் இவ்வாறு உசுப்பேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தொடர்ந்தும் குழப்பகரமான சூழல் நிலவுமாக இருந்தால், பாதுகாப்பற்ற நிலைமை நீடிக்குமானால் பல நாடுகள் தங்களது தூதரகங்களை மூடி விடுவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளனர் என்றும் சுரேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,