இலங்கையில் நடத்த கொடூரம்! நபர் ஒருவரின் கைகளை வெட்டிவிட்டு அந்தக் கைகளுடன் தப்பிச் சென்ற சந்தேகநபர்
மொரட்டுவை – கொரலவெல்ல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் நபர் ஒருவரின் கைகளை வெட்டிவிட்டு, அந்தக் கைகளுடன் தப்பிச் சென்ற சந்தேகநபரை கைது செய்ய விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக மொரட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (21) இரவு குறித்த நபர் தனது வீட்டின் முன்பாக நின்று கொண்டிருந்த போது, சந்தேக நபர் கூரிய ஆயுதத்தால் அவரது கைகளைத் துண்டித்துள்ளார்.
காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதி
சம்பவத்தில் காயமடைந்தவர் மொரட்டுவை கொரலவெல்ல பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
காயமடைந்த நபர் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்தவர் மொரட்டுவை பொலிஸாருக்கு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், சந்தேகநபர் துண்டிக்கப்பட்ட கை பாகங்களை எடுத்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
இவ்வாறு எடுத்துசெல்லப்பட்ட கை பாகங்களை கண்டுபிடிக்கும் நோக்கில் பொலிஸ் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தனிப்பட்ட முரண்பாட்டின் காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

23 வயது நடிகையை காதலிக்கும் ஷாலினி அஜித்தின் சகோதரர் ரிச்சர்ட்! வைரலாகும் ஜோடியின் போட்டோ Cineulagam

ஜீ தமிழ் சரி கம பா நடுவர் கார்த்திக்கின் மனைவி, பிள்ளைகளை பார்த்துள்ளீர்களா.. அழகிய குடும்ப புகைப்படம் Cineulagam

மேகன் உடனான திருமண உறவில் ஹரி நீடிக்க காரணம் இது தான்: அரச குடும்ப சேவகர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் News Lankasri

கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்! நிரூபர்களுக்கு அளித்த நக்கலான பதிலால் சர்ச்சை Manithan
