உயர்மட்ட பாதுகாப்புத் தலைவர் ஒருவர் தொடர்பில் விசேட இரகசிய பொலிஸ் விசாரணை
தேசிய பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கும் உயர்மட்ட பாதுகாப்புத் தலைவர் ஒருவர் தொடர்பில் விசேட இரகசிய பொலிஸ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் பொலிஸாருக்கு வழங்கிய எழுத்து மூல உத்தரவின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் மே மாதம் 9ஆம் திகதி வரையில் நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முறையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை, தெளிவான கட்டளைகள் மற்றும் உத்தரவுகளை வழங்காமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலேயே இந்த விசாரணை நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி
முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்தின் முன் போராட்டம் நடத்தியது, அமைச்சர்களின் வீடுகளை எரித்து அழித்தது, அரச தலைவரின் பாதுகாப்பை உறுதி செய்யாமை உள்ளிட்ட பல கடுமையான குற்றச்சாட்டுகள் மீது இந்த விசாரணை நடத்தப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது.

இந்த விசாரணையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சம்பந்தப்பட்ட பாதுகாப்புப் பிரிவின் தலைவரிடம் விசாரணை நடத்த உள்ளதாகவும், விசாரணையின் பின்னர் அவர் தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் சட்டமா அதிபர் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொழில் தொடங்குவதற்குள் குணசேகரன், ஜனனிக்கு ஏற்படுத்திய பெரிய பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
98வது ஆஸ்கர்.. சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவில் தேர்வாகியுள்ள ஜான்வி கபூரின் 'ஹோம்பவுண்ட்' படம்.. Cineulagam
Bigg Boss: பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற கதறியழும் சாண்ட்ரா... பிக்பாஸ் எடுக்கும் முடிவு என்ன? Manithan