இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர்: வெளிநாட்டு நிபுணர்களை நாடும் SLC
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுவதாக சனத் ஜயசூரிய அறிவித்துள்ள நிலையில், அவருக்குப் பதிலாக புதிய வெளிநாட்டுப் பயிற்சியாளர் ஒருவரை நியமிப்பதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தைகளை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் (SLC) ஆரம்பித்துள்ளது.
புதிய பயிற்சியாளர் நிச்சயமாக ஒரு வெளிநாட்டவராகவே இருப்பார் என்பதை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா உறுதிப்படுத்தியுள்ளார்.
புதிய பயிற்சியாளரை நியமிக்க திட்டம்
தற்போது பல வெளிநாட்டுப் பயிற்சியாளர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், எனினும் அவர்களது விபரங்களை இப்போதைக்கு வெளியிட முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மார்ச் நடுப்பகுதியில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் (UAE) நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் தொடருக்கு முன்னதாக புதிய பயிற்சியாளரை நியமிக்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் திட்டமிட்டுள்ளது.
2023 உலகக்கிண்ணப் பின்னடைவு மற்றும் 2024 டி20 உலகக்கிண்ணச் சவால்களுக்கு மத்தியில் ஜயசூரிய பொறுப்பேற்றார்.
அவரது காலப்பகுதியில் இலங்கை அணி அனைத்து வடிவங்களிலும் 75 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் இலங்கை அணி 34 வெற்றிகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
முடிவுக்கு வரும் ஈரான் போர் நிறுத்தம்... மத்திய கிழக்கில் படைகளைக் குவிக்கும் அமெரிக்கா News Lankasri
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri