இலங்கையில் ஒருவர் 13,810 ரூபாய் வைத்திருந்தால் போதும் - அரசாங்கம் வெளியிட்ட தகவல்
சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்திற்கான சமீபத்திய வறுமைக் கோட்டின் படி, இலங்கையில் ஒரு நபரின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு குறைந்தபட்ச மாதாந்தத் தொகை 13,810 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் இந்த தொகை 13,772 ரூபாயாக காணப்பட்டுள்ளது.
மாவட்ட அடிப்படையின்படி கொழும்பு மாவட்டத்தில் வாழும் ஒருவர் தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அதிகளவு செலவு செய்ய வேண்டியுள்ளது.
கொழும்பில் வாழும் ஒருவரின் மாதந்த செலவிற்கு 14,894 ரூபாய் தேவைப்படும் நிலையில் மொனராகலை மாவட்டத்தில் மாவட்டத்தில் வாழ 13,204 ரூபாய் போதுமென குறிப்பிடப்படுகின்றது.
கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் 2022 அக்டோபரில் பதிவான உயர் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மதிப்பு இந்த உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டின் அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
