இலங்கை வருகின்றார் சீனாவின் பாதுகாப்பு அமைச்சர்! விசேட சந்திப்புகளுக்கும் ஏற்பாடு
சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் பெங்கே இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வருகைதரவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் இந்த மாத இறுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் இலங்கையின் அரச தலைவர்கள் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சீனாவின் பாதுகாப்பு அமைச்சரின் விஜயத்திற்கான திகதிகள் இன்னமும் உறுதியாகாத போதிலும் அவர் புதுவருடத்தின் பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வார் என வெளிவிவகார அமைச்சை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, சீனாவிற்கு விஜயம் செய்யுமாறு அந்நாட்டு ஜனாதிபதி, இலங்கை ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் சீனாவிற்கான விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam