அமைச்சருக்கான சம்பளத்தை நிராகரித்த தென்னிலங்கை அரசியல்வாதி
பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளதென ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
கிடைத்திருக்கும் அமைச்சு பதவி என்ன என்பதனை தூரமாக வைத்து விட்டு பெற்ற பொறுப்பை சரியாக நிறைவேற்ற வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பளம் நிராகரிப்பு
அமைச்சரின் சம்பளத்தை பெற்றுக் கொள்ளாமல் உறுப்பினர்கள் சம்பளத்தை மாத்திரம் பெற்றுக்கொண்டு செயற்பட வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் தெளிவாக கூறியுள்ளோம்.
இந்த நேரத்தில் நாட்டுக்காக நமது கடமையை செய்ய வேண்டும். ஜனாதிபதி அரசியலமைப்பின் படி செயற்பட்டார்.
அரசியலமைப்பை மீறும் வகையில் எந்தவொரு செயற்பாடும் மேற்கொள்ளப்படவில்லை என்பதை விசேடமாக குறிப்பிட வேண்டும்.
அரசியல் ஸ்திரத்தன்மை
வலுவான அரசாங்கம், முதலீட்டாளர்களை ஈர்க்கும் மற்றும் கடன் உதவி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு அரசியல் ஸ்திரத்தன்மை தேவை. எங்களுக்கு அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் உள்ளடங்கிய அமைச்சரவை தேவை. அரசாங்கத்தின் பலம் அதில் தங்கியுள்ளது. இந்த முடிவால் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்துக்கும் சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட இலக்கின்படி அர்ப்பணிப்புடன் செயற்படுகின்ற அதேவேளை ஜனாதிபதியும் இந்த நேரத்தில் எமது பாராட்டுக்கு உரியவர்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.