ஆசிய அபிவிருத்தி வங்கியுடனான பேச்சுவார்த்தைக்கு அமைச்சரவை அங்கீகாரம்
ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் பேச்சுவார்த்தை கலந்துரையாடல்களை நடத்தி உடன்படிக்கை மேற்கொள்ள முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
மானியம் வழங்க ஒப்புதல்
உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மறுசீரமைப்பு அவசர உதவித் திட்டம், ஏழைகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், ஒரு வளமான மற்றும் நெகிழ்ச்சியான ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியத்திற்கான ஜப்பான் நிதியானது, திட்ட நடவடிக்கைகளுக்கு நிதியளிப்பதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் மூலம் 3 மில்லியன் அமெரிக்க டொலர் மானியத்தை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 2 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
