புதிய முறை பேருந்து கட்டணம்.. அதிக பணம் வசூலிக்கும் வங்கிகள்!
பேருந்து கட்டணத்தை வங்கி அட்டை மூலம் செலுத்துவதற்கு வங்கிகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சம்பத் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
பேருந்துகளில் பயணிப்பதற்கு வங்கி அட்டை கட்டண வசதியை வழங்கியதற்காக அரசாங்கத்திற்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
பேருந்து உரிமையாளர்கள், நீண்ட காலமாக இந்த முறைக்காகக் காத்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வங்கி வசூலிக்கும் கட்டணம்
போக்குவரத்து அமைச்சகத்துடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்களின் போது, இந்த முறைக்கு வங்கி வசூலிக்கும் கட்டணம் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியதாக அரசாங்கம் பேருந்து உரிமையாளர்களிடம் தெரிவித்தது.

ஆனால் தற்போது இந்த கட்டணத் தொகை 1.3 மற்றும் 1.8 சதவீத வரம்பில் வசூலிக்கப்பட இருப்பதாக சம்பத் ரணசிங்க கூறியுள்ளார்.
மிகவும் சிரமப்பட்டு பேருந்துகளை இயக்குவதன் மூலம் கிடைக்கும் வருவாயில் 1.5 சதவீத பணத்தை வங்கிக்கு செலுத்தத் தயாராக இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அணையா விடுதலைத்தீ சங்கரின் சாவு எப்படி வீரசரித்திரமானது.. 10 மணி நேரம் முன்
மரணத்தைக் கண்டேன்..இயேசுவை சந்தித்த பின் காப்பாற்றப்பட்டேன் - ஐரிஷ் வீரரின் பதிவு வைரல் News Lankasri
விசா நிராகரிப்பால் உயிரைவிட்ட இந்திய மருத்துவர்! சிதைந்த அமெரிக்க கனவு..சிக்கிய கடிதம் News Lankasri
வெட்ட வந்த அறிவுக்கரசி, கடும் ஷாக்கில் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam