உயரும் ரூபாவின் பெறுமதி! பேருந்து கட்டணம் குறைப்பது தொடர்பில் வெளியான அறிவிப்பு
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வருவதையடுத்து, எரிபொருள் விலை குறைக்கப்பட்டால், ஜூன் மாத பேருந்து கட்டண திருத்தத்தில், கட்டணக் குறைப்பு செய்யப்படக்கூடுமென தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்ட அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன,
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலேயே, தேசிய பேருந்து கட்டண சூத்திரம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
பேருந்து கட்டணமும் நிச்சயமாக குறைவடையும்
டொலரின் பெறுமதி மற்றும் பணவீக்கத்தின் அடிப்படையில், இந்த நிலைமை அவதானிக்கப்படுகிறது. இதற்கமைய, பணவீக்கம் குறைவடையுமாயின், பேருந்து கட்டணமும் நிச்சயமாக குறைவடையும் என்ற எண்ணக்கரு உள்ளது.
விலை தளம்பல் குறித்து, நாளாந்தம் ஆய்வு செய்து தரவுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு அறியப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.