நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கையில் விதிக்கப்படும் தடை
பெண்களை, வீட்டு மற்றும் பயிற்சியற்ற துறைகளில் தொழிலுக்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களால் அனுப்பப்படும் நடவடிக்கைக்கு நாளை (11.11.2022) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தற்காலிகமாக தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.
துன்புறுத்தலுக்கு உள்ளாகும் பெண்கள்
அதில் மேலும், சுற்றுலா வீசா மூலம் வெளிநாட்டு தொழில்களுக்குச் சென்ற பெண்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு வேலைக்குச் சென்றவர்கள். இவர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா வீசாவில் சென்று வேலையின்றி இருக்கின்றனர்.

எந்தவொரு நிறுவனமோ அல்லது நபரோ இவர்களை பொறுப்பேற்க முன்வராததால், அவர்கள் தவறாக நடத்தப்படுவதாக இலங்கை தூதரகங்கள் தெரிவித்துள்ளன. இதன்படி, அவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதில் சிக்கல் நிலை உருவாகியுள்ள நிலையில், சுற்றுலா வீசா மூலம் பயிற்சியற்ற தொழில்களுக்கு பெண்களை பரிந்துரைப்பதை தடை செய்யுமாறு தொழில் அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜனவரி முதல் அக்டோபர் வரையான காலப்பகுதியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பை வழங்குவதாகக் கூறி பண மோசடி செய்த 570 நபர்கள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பில் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
மோசடியான முறையில் பெறப்பட்ட பணம்
இவ்வாறான 182 முறைப்பாடுகளுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், மேலும் மோசடியான முறையில் பெற்ற 28,383,000 ரூபாவை முறைப்பாட்டாளர்களுக்கு மீள பெற்றுக் கொடுக்க பணியகம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மோசடியான வெளிநாட்டு வேலைவாய்ப்பு சம்பவங்கள் தொடர்பில் பணியகத்திற்கு செய்யப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் 17 சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்டு 43 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன், இவ்வருடத்தில் சட்டவிரோதமான முறையில் தொழில் நிமித்தம் வெளிநாடு செல்ல முயற்சித்த 586 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விமான நிலையப் பிரிவினரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இவ்வருடம் ஜனவரி மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் சுற்றுலா வீசாக்களை பயன்படுத்தி வெளிநாடு செல்ல முயற்சித்த சிலரே இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri