இந்தியாவிற்கு 14 நாட்கள் பயண வரலாற்றை கொண்டவர்களும் இலங்கை வர தடை!
கடந்த 14 நாட்களுக்குள் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்ட பயணிகள் இலங்கையில் இறங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அனைத்து விமான நிறுவனங்களுக்கும் அறிவித்துள்ளதாக இலங்கை சிவில் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
இது உடனடியாக நடைமுறைக்கு வரும் எனவும், மீள் அறிவிப்பு வரும் வரை இந்த நடைமுறை அமுலில் இருக்கும் என்றும் இலங்கையின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் தெமியா அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.
சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கோவிட் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், அங்கிருந்து வருகை தரும் அனைவருக்கும் உடனடியாக தடை விதிக்கப்படும் என்று இலங்கை இன்று அறிவித்துள்ளது.
பிரித்தானியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அவுஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் போன்ற பல நாடுகள் ஏற்கனவே இந்தியா மற்றும் பிற தெற்காசிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு தடை விதித்துள்ளது.
முன்னதாக இந்தியாவில் இருந்து பயணிகள் இலங்கையில் இறங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் கூறியிருந்தமை குறிப்பிடத்கதக்து.
தொடர்புடைய செய்தி....
கோவிட் தீவிரத்தால் இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு இலங்கை கதவடைப்பு
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri