முடிவை பகிரங்கமாக அறிவித்தது இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் - சஜித்திற்கு அனுப்பப்பட்ட கடிதம்
தனது உறுப்பினர்கள் இன்று(20.08.2026) நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ளமாட்டார்கள் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆகிய இரு தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்பை உறுதிசெய்யும் வகையில், இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் வரை ஒத்திவைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கட்சித் தலைவருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 22வது திருத்தம்
இன்று(20.08.2026) நாடாளுமன்றத்தில் நடைபெறும் நடவடிக்கைகளையும், அரசாங்கம் அறிவித்துள்ள நிலைப்பாட்டையும் கருத்தில் கொள்ளும்போது, இது தொடர்பாக எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என்றும், தனது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த வாய்ப்பை வழங்குவதில் அரசாங்கம் தற்போது ஆர்வம் காட்டவில்லை என்றும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 22வது திருத்தம் குறித்து அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தெரிவிப்பதற்காக இன்று(20) நாடாளுமன்றத்தில் கலந்துகொள்ளுமாறு இலங்கை சட்டசபைக்கு எதிர்க்கட்சித் தலைவர் அறிவித்திருந்தார்.
இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் நேற்று(19.08.2026) நாடாளுமன்றத்தில் தெரிவித்தபோதிலும், அரசாங்கத்திடமிருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.