சீன உற்பத்தி பொருளொன்றுக்கு இலங்கையில் திடீர் தடை
சீனாவில் இருந்து சேதன பசளையை இறக்குமதி செய்ய தடை விதிக்கவுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சீனாவிலிருந்து சேதன பசளை இறக்குமதி செய்யும் நோக்கில் அதற்காக சில பசளை மாதிரிகளும் இறக்குமதி செய்யப்பட்டிருந்ததாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
எனினும் குறித்த பசளை இலங்கையின் மண்வளத்துக்கும், காலநிலைக்கும் பொருத்தமற்ற நுண்ணுயிரிகள் காணப்படுவதாக விவசாயத்துறை நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விவசாயத்துறை அமைச்சு பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு விடயங்களைத் தெளிவுபடுத்தியிருந்தது.
குறித்த மாதிரிகள் பரிசோதனைக் கூடத்துக்குக் கிடைக்கப்பெற்றபோது, அவை திறந்த நிலையில் காணப்பட்டதாக சந்தர்ப்பமொன்றில் அமைச்சின் செயலாளர் தெரிவித்திருந்தார். இவ்வாறு முன்வைக்கப்பட்ட பல்வேறு கருத்துகளின் காரணமாகச் சேதன பசளை இறக்குமதி குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன.
குறித்த உற்பத்தி தொடர்பில் இரண்டு தடவைகள் மேற்கொண்ட பரிசோதனையில் சேதன பசளை இலங்கைக்கு பொருத்தமற்றது என கண்டறியப்பட்டுள்ளது. இதனயடுத்து தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

அந்தரத்தில் பறந்தபடி என்னோடு நீ இருந்தால் பாடல் பாடி அசத்திய ஷிவானி.. சரிகமப சீசன் 5ல் அசந்துபோன நடுவர்கள் Cineulagam
