இலங்கையின் பிரபல வங்கியில் நடந்த பாரிய மோசடி
இலங்கையில் பிரபல வங்கியில் பாரிய மோசடியில் ஈடுபட்ட ஊழியரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வங்கியில் 383.4 மில்லியன் ரூபாவை மோசடி செய்த வங்கி ஊழியர் ஒருவரே எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நேற்று கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
92 கணக்குகளுக்கு மாற்றம்
சந்தேகநபர் 92 கணக்குகளில் குறித்த பணத்தை வைப்பிலிட்டுள்ளதாக வங்கியின் தலைவர் முறைப்பாடு செய்திருந்தார்.
இதற்கிணங்க, சந்தேகநபர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிணை வழங்க மறுப்பு
பிணை வழங்குமாறு பிரதிவாதி சார்பில் முன்னிலையான சட்டத்தரணியின் கோரிக்கையை நீதவான் நிராகரித்துள்ளார்.
குறித்த பணம் வரவு வைக்கப்பட்டுள்ள 92 வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.