வீடொன்றில் இருந்து பல இராணுவ சீருடைகள் மீட்பு! பிரதேசத்தையே சுற்றிவளைத்த பாதுகாப்பு படை
அம்பலாங்கொடை, அஹுங்கல்ல, மெட்டியகொட பொலிஸ் பிரிவுகளில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படை, கடற்படை மற்றும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தொடர் கொலைகள் மற்றும் ஏனைய குற்றச் செயல்கள் காரணமாக இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தப்பிச் சென்ற இராணுவ வீரர்

இதன்படி, புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட சோதனையின் போது, போகஹவெல பிரதேசத்தில் உள்ள ஊரகஸ்மன்ஹந்திய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து பல இராணுவ சீருடைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த வீட்டில் தற்காலிகமாக தங்கியிருப்பவர் இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற இராணுவ வீரர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சந்தேகநபரை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், உரிய இராணுவ சீருடைகள் ஊரகஸ்மன்ஹந்திய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Chelsea அணியை விற்றத் தொகை... ரஷ்ய கோடீஸ்வரருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்த பிரித்தானியா News Lankasri
முத்துவை அசிங்கப்படுத்திய சீதா, நீதுவால், ரவி-ஸ்ருதி இடையே வெடித்த பெரிய பிரச்சனை... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam