காலிமுகத்திடல் போராட்டத்தில் பங்கேற்று போராட்டங்களை நேரலை செய்தமைக்காக,
விசாரணை செய்யப்பட்டு பின்னர் தலைமறைவாகிய, ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த பெண்
அன்ட்ரூஸ்
கெய்லி பிரேசர், தாம் வெளிவராத இடம் ஒன்றில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
டெய்லி ரெக்கோட் என்ற இணையத்துக்கு செவ்வியளித்துள்ள அவர்,
தம்மிடம்
கடவுச்சீட்டு இல்லை என்றும், பணம் மிகவும் குறைவாக உள்ளது என்று
குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தாம் யாரையும் நம்பவில்லை என்றும் சோர்வடைந்து,
குற்றவாளியை போன்று நோய்வாய்ப்பட்டிருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
தம்மை கைது செய்தால் அதிகாரிகள் என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை. ஏற்கனவே
அவர்கள் காட்டியுள்ள செயல்களால், அவர்களின் காவலில் இருப்பதற்கு தாம்
பயப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு,