புதிய அமைச்சரவை! ஜனாதிபதி ரணிலின் தெரிவுகள் தொடர்பில் வெளியான தகவல்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது படிப்படியாக நாட்டை மீட்டுக் கொண்டிருக்கின்றார். இதன் காரணமாகவே பணவீக்கம் கனிசமானளவு குறைவடைந்துள்ளது. எனவே அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து , எதிர்கால சந்ததியினருக்கு நாட்டை இல்லாமலாக்கி விட வேண்டாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அரசாங்கத்தின் பெரும்பான்மை பொதுஜன பெரமுனவிடமே காணப்படுகிறது. அதன் காரணமாகவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பெரும்பான்மையுடன் எம்மால் தெரிவு செய்ய முடிந்தது.
குறைவடைந்த பணவீக்கம்
எனவே புதிய அமைச்சுக்களை நியமிப்பதில் ஜனாதிபதி சிறந்த தெரிவுகளை மேற்கொள்வார் என்று நம்புகின்றோம். மீண்டும் புதிய அமைச்சுக்கள் வழங்கப்படவுள்ள விவகாரத்தில் எமக்கு எவ்வித சிக்கலும் இல்லை. நாம் அவற்றை எதிர்பார்த்துக் கொண்டிருக்கவும் இல்லை.
பொதுஜன பெரமுனவில் சிறப்பாக செயற்படக் கூடியவர்கள் உள்ளனர். கட்சி தாவக் கூடிய எவரும் எம்முடன் இல்லை. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியினரே கட்சி தாவினர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது படிப்படியாக நாட்டை மீட்டுக் கொண்டிருக்கின்றார்.
இதன் காரணமாகவே பணவீக்கம் கனிசமானளவு குறைவடைந்துள்ளது. எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாட்டுக்கும் தீர்வு கிட்டியுள்ளது.
எனவே அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து, எதிர்கால சந்ததியினருக்கு நாட்டை இல்லாமல் செய்து விட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம்.
இந்த ஆர்ப்பாட்டங்களை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதன் காரணமாகவே எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் சு.க. பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவும் பொது மக்களால் அவமானப்படுத்தப்பட்டனர் என குறிப்பிட்டார்.