காலிமுகத்திடல் போராட்டக்களத்தின் பின்னணியில் ரணில் செயற்பட்டாரா!: காலம் கடந்து தேரர் வெளியிட்ட தகவல்
காலிமுகத்திடலை அடிப்படையாக கொண்டு முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பௌத்த சமயத்திற்கு சந்தர்ப்பம் கொடுக்கப்படவில்லை எனவும் கத்தோலிக்க சமயத்திற்கு அதனை விடவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது எனவும் பலாங்கொட கஸ்சப்ப தேரர் தெரிவித்துள்ளார்.
இணையத்தள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.
கத்தோலிக்க திருச்சபை போராட்டத்திற்கு நிதியுதவி வழங்கியது. மக்கள் விடுதலை முன்னணியும் முன்னிலை சோசலிசக்கட்சியும் போராட்டத்திற்குள் நுழைந்து அதனை அழித்து விட்டன.
அமைதியான போராட்டத்தை இந்த கட்சிகளே வன்முறையை நோக்கி கொண்டு சென்றன.
ரணில் விக்ரமசிங்கவின் குழு

போராட்ட களத்தில் ஐக்கிய தேசியக் கட்சியினர் என்று கூறிக்கொண்டவர்கள் இருந்தனர். ரணில் விக்ரமசிங்கவின் குழு, அவர் பிரதமராக தெரிவானதும் போராட்ட களத்தில் இருந்து வெளியேறியது. அதன் பின்னர் போராட்ட களத்திற்கு உணவு, பானங்கள் கிடைக்காத நிலைமை ஏற்பட்டது.
இவ்வாறு திட்டமிட்டு செயற்பட்டவர்களும் போராட்ட களத்தில் இருந்தனர்.
குமார் குணரட்னம் திட்டமிட்டு, தமது கட்சியின் குழுவினரை போராட்ட களத்திற்கு அனுப்பி இருந்தார். அனுரகுமார திஸாநாயக்கவும் தமது குழுவினரை அங்கு அனுப்பி இருந்தார்.
இவர்களில் குமார் குணரட்னம் குழுவினருக்கே அதிகமான பலம் இருந்தது. மக்களுக்கு தற்போது போராட்டம் வெறுப்பாகியுள்ளது.
எந்த கட்சி அழைத்தாலும் தற்போது எவரும் வீதியில் இறங்க மாட்டார்கள். போராட்ட களத்தில் இருந்து மீட்கப்பட்டதாக கூறப்படும் போதைப் பொருட்கள், கஞ்சா செடி என்பன வெளியில் இருந்து கொண்டு வரப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டவை. போராட்டத்தை மலினப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை எனவும் பலாங்கொட கஸ்சப்ப தேரர் தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச

இந்நிலையில் மீண்டும் நாடு திரும்பியுள்ள கோட்டாபய ராஜபக்சவுக்கு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியில் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
அவர் மீண்டும் அரசியலுக்குள் வருவதா என்பது தொடர்பில் அவரே முடிவு எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் தினேஷ் குணவர்த்தன மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இலங்கை அரசியலில் இவ்வாரம் பல முக்கிய திருப்பங்கள் ஏற்பட்டுள்ள அவை தொடர்பான முழுமையான தகவல்களை தொகுத்து வழங்கும் எமது அரசியல் பார்வை இதோ.
இலங்கைத் தமிழ் ரொம்ப பிடிக்கும் -சிட்னியில் ரசிகர்களை கவர்ந்த த்ரிஷா... விஜய் குறித்து ரசிகர் எழுப்பிய கேள்வி! Manithan