காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் விடுதலைப்புலிகள் பங்கேற்றிருந்தனர்: எஸ். பி. திசாநாயக்க வெளியிட்ட தகவல்
காலி முகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களும் பங்கேற்றிருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையி்ல்,
மக்கள் விடுதலை முன்னணி
திட்டமிட்ட வகையில் ஒரு அரசியல் கட்சியினால் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. மக்கள் விடுதலை முன்னணியினாலே வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது.
அமரகீர்த்தி அத்துகோரலவையும் மக்கள் விடுதலை முன்னணியினரே கொலை செய்தனர். மக்கள் விடுதலை முன்னணியிரே அதற்கு தலைமைத்துவம் வகித்தது.
பிரசன்ன ரணதுங்கவின் வீட்டிற்கு தீ வைத்தவரும் மக்கள் விடுதலை முன்னணியில் அங்கம் வகிக்கும் பிரதிநிதி ஆவார். நிமல் லன்சாவின் வீட்டிற்கு தீ வைத்தவரும் திசைக்காட்டியில் வேட்ப்புமனு தாக்கல் செய்தவர் ஆவார்.
காலிமுகத்திடல் போராட்டத்திற்கு தலமை வகிக்க மக்கள் விடுதலை முன்னணியினர் முயற்சித்து தோற்றுப் போயினர். காரணம் முன்னிலை சோசலிச கட்சியினர் அங்கு வலுப்பெற்றியிருந்தனர்.
தமிழீழ விடுதலைப்புலிகள்
விடுதலைப்புலிகளும் அங்கம் பெற்றியிருந்தனர். வார்த்தைகளில் குழப்பம் இன்றி கூறுகின்றேன். விடுதலைப்புலிகள் இருந்தார்கள். காலிமுகத்திடலுக்கு விடுதலைப்புலிகள் வருகை தந்திருந்தார்கள். வேறு நாடுகளில் செயற்படுகின்ற விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் காணப்பட்டார்கள்.
முஸ்லிம் அடிப்படைவாதிகளும் காணப்பட்டனர் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மே 10ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மைக்கான சதி எங்கிருந்து யாரால் கொண்டுவரப்பட்டது, இறுதி நாட்களில் கோட்டாபயவிற்கு ஆலோசனை வழங்கியவர்கள் யார், கோட்டாபயவுடன் உரையாடிய வெளிநாட்டவர்கள் யார், காலி முகத்திடலில் இடம்பெற்ற ஆர்பாட்டத்தின் பிரதான சூத்திரதாரி தொடர்பிலான முழுமையான விபரத்தை தாம் அறிவதாகவும் குறிப்பிட்ட அவர், தான் அதனை பகிரங்கப்படுத்த மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.
