கொழும்பில் பொலிஸாரால் நடத்தப்பட்ட கண்ணீர்ப்புகைத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள்
கொழும்பில் இன்று பொலிஸார் மேற்கொண்ட கண்ணீர்ப்புகை தாக்குதலில் பாடசாலை மாணவர்கள் சிலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற போராட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகைத் தாக்குதலை நடத்தியிருந்தனர்.
இந்த தாக்குதலின் போது பாடசாலை மாணவர்கள் சிலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட மாணவர்கள்
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தினால் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை கலைப்பதற்காக பல்கலைக்கழக வளாகத்திற்குள் பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை பிரயோகித்ததை எதிர்த்து கொழும்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டது.
இந்த நிலையில், போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகைத் தாக்குதலை மேற்கொண்டனர்.
இதன்போது, கொழும்பு கேம்பிரிட்ஜ் பிளேஸுக்கு அருகில் பொலிஸாரின் கண்ணீர்ப்புகைத் தாக்குதலுக்கு பல இளம் பாடசாலை மாணவர்கள் பாதிப்படைந்துள்ளனர்.
கண்ணீர்ப்புகைத் தாக்குதலால் அசெளகரியங்களுக்கு உள்ளான மாணவர்கள் அருகிலுள்ள பாடசாலைக்குள் கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.







SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
