இலங்கையில் நடந்த போராட்டத்தின் பின்னணியில் இருக்கும் மறைகரம்! அம்பலமான சர்வதேச சதி
இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பாரிய போராட்டங்களுக்கு பின்னால் சர்வதேச சதி இருப்பதாக எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.
சிங்கள தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
போராட்டத்தை முன்னின்று நடத்துவதில் 'போன் எகெய்ன்' (Born Again) என்ற குழு, பிரதான பங்குதாரராக செயற்பட்டது.
ஒன்றிணைந்து இயங்கிய புலனாய்வுச் சேவை
போன் எகெய்ன் எனும் மதக் குழு போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றதுடன், சர்வதேச புலம்பெயர் அமைப்புகளும் காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாட்டை சீர்குலைக்க சர்வதேச சமூகம் விரும்பியது, போராட்டம் தொடங்கிய தருணத்திலிருந்து, 'ரோ மற்றும் சிஐஏ' புலனாய்வு சேவைகள் அதற்கு ஒரு பாரிய பங்களிப்பை சேர்த்தன. இரு புலனாய்வு சேவைகளும் ஒன்றாக இணைந்து இயங்கியது என குறிப்பிட்டுள்ளார்.
1980 ஆம் ஆண்டுகளில் இலங்கைக்கு வந்து அமெரிக்க கிறித்தவத்தை ஆதரிக்கும் குழுக்களில் ஒன்றே போன் எகெய்ன் என்றும், அது நாட்டை சீர்குலைப்பதில் பெரும் பங்காற்றியுள்ளதாக தற்போது தமக்கு தகவல் கிடைத்துள்ளதென எல்லே குணவன்ச தேரர் மேலும் தெரிவித்தார்.
முழுப் போராட்டத்தையும் நடத்தியதில் கொரிய வம்சாவளியைச் சேர்ந்த இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவருக்கும் பங்குண்டு. அவர் போராட்டத்தில் கண்ணுக்குத் தெரியாத கரமாக செயற்பட்ட போன் எகெய்னின் உறுப்பினர்.
சர்வதேச படையெடுப்புகள், போராட்டத்தின் மூலம் நாட்டின் வளங்களை கொள்ளையடிக்கும் முயற்சி இடம்பெற்றது என எல்லே குணவன்ச தேரல் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.