போராட்டத்தில் குழப்பம் விளைவித்த 200 பேர் தலைமறைவு
அண்மையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட குழப்பங்களை விளைவித்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட 404 பேரில் இதுவரையில் 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமூக ஊடகங்களின் வாயிலாக குற்றச் செயல்கள் மற்றும் குழப்பங்களை விளைவித்த சுமார் 400 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தலைமறைவாகியுள்ள போராட்டக்காரர்கள்
எனினும் இவர்களில் சுமார் 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஏனையவர்கள் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிலர் தங்கள் இருப்பிடங்களை கைவிட்டு வேறும் இடங்களுக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு தீயிட்டவர்கள் உள்ளிட்ட சந்தேக நபர்கள் இவ்வாறு தலைமறைவாகியுள்ளதாக குற்ற விசாரணைப் பிரிவின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளதாக ஞாயிறு சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.