வருமான அறிக்கை சமர்ப்பிக்க நாளை வரை காலகெடு - மீறுவோருக்கு அபராதம்
வருடாந்த வருமான அறிக்கை நாளைய தினத்திற்கு முன்னர் சமர்ப்பிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2022 - 2023ஆம் ஆண்டிற்கான வருடாந்த வருமான அறிக்கை நாளைய தினத்திற்கு முன்னர் திணைக்களத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என இலங்கையின் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
தற்போதுள்ள உள்நாட்டு வருவாய் சட்டத்திற்கமைய, 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான மதிப்பீட்டு ஆண்டுக்கான வருடாந்திர வருமான அறிக்கையை நாளைய தினத்திற்கு முன் சமர்ப்பிக்க வேண்டும் என்று திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
வரிக் கோப்பு
குறித்த திகதிக்குள் அறிக்கையை சமர்ப்பிக்காமல் வரிக் கோப்புகளை வைத்திருப்பவர்களுக்கு 50,000 ரூபாய் அபராதமும், செலுத்த வேண்டிய வரியில் 5 வீதமும் விதிக்கப்படும் என அதிகாரிகள் மேலும் சுட்டிக்காட்யுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அரச அதிகாரிகளுக்கான வருடாந்த வருமான அறிக்கை மற்றும் சமர்ப்பிப்புகளை நிறைவு செய்வது தொடர்பாக திங்கட்கிழமை நடத்தப்பட்ட செயலமர்வில் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் இதனைத் தெரிவித்தனர்.