நாட்டின் தற்போதைய நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இரட்டைக்காய்களை பறித்துள்ளது: நஸீர் அஹமட்
சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதில் ஜனாதிபதி அவசரப்படுவது, பொருளாதார நெருக்கடியிலிருந்து மக்களை காப்பாற்றத்தான் எனவும், இந்தத் தருணத்தை நன்குணர்ந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு இரட்டைக்காய்களை பறித்துள்ளது என சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
சர்வகட்சி அரசாங்கத்தை ஆதரிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவை வரவேற்று அமைச்சர் நஸீர் அஹமட் வெளியிட்டுள்ள அறிக்கையிலே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,
தமிழ் தேசிய கூட்டமைப்பு
“சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்க முன்வந்துள்ளமை, தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை அடைந்து கொள்ளும் வாசலைத் திறக்க வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலத்துக்கேற்ற இந்த முடிவு, மூத்த தமிழ் தலைவர் சம்பந்தனின் அரசியல் தீர்க்கதரிசனத்தின் அடையாளமாக உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு சர்வகட்சி அரசாங்கம் அவசியம் அமைக்கப்பட வேண்டும். இந்தத் தேவையிலிருந்து பொறுப்புள்ள அரசியல் கட்சிகள் விலகியிருக்க முடியாது.
முஸ்லிம் தலைமைகள் வியூகம்
ஒன்று மக்களின் நெருக்கடியை போக்க உதவுவது, இரண்டாவது தமிழர்களின் பிரச்சினையை தீர்க்க தருணம் பார்ப்பது.
எனவே, ஒருவகையில் இதுவும், பேரம்பேசும் சக்தியின் ஒரு வடிவமாகவே பார்க்கப்பட வேண்டும்.
இவ்வாறு, முஸ்லிம் தலைமைகள் வியூகம் வகுக்காமலிருப்பது ஏன்.
அரசியல் தீர்வில் நாட்டமில்லையா?அல்லது தங்களது சமூகத்துக்கு பிரச்சினைகள் இல்லையென்றா இத்தலைமைகள் சிந்திக்கின்றன. எனவே, இன்றைய நிலையில் அரசாங்கத்துக்கு எழுந்துள்ள தேவையை அறிந்து, முஸ்லிம் தலைமைகளும் இவ்வாறான அரசியல் வியூகங்களை வகுக்க வேண்டும்.
இழந்து போயுள்ள பேரம்பேசும் பலத்தை இலகுவாக பயன்படுத்த கிடைத்துள்ள இந்தச் சந்தர்ப்பத்தை முஸ்லிம் தலைமைகள் தவறவிடக் கூடாது“ என்றும் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
"யாழ். பிரபல பாடசாலை ஒன்றில் மாணவிக்கு நேர்ந்த கொடுமை" (Video) |

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

பிரித்தானிய மகாராணியால் போரை அறிவிக்க முடியும்! பாஸ்போர்ட் இல்லாமல் உலகம் சுற்றலாம்.. சக்திவாய்ந்த பெண் News Lankasri

இதெல்லாம் ஒரு பொழப்பா? இந்த காசு தேவையா? பயில்வான் ரங்கநாதனுக்கு சரியான நெத்தியடி கொடுத்த கலா மாஸ்டர் Manithan

காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற மனைவி தீபிகாவுக்கு தினேஷ் கார்த்திக் தந்த முதல் ரியாக்ஷன்! புகைப்படம் News Lankasri

ஒவ்வொரு ஆணும் கட்டாயம் 2 திருமணம் செய்து கொள்ள வேண்டும்! மீறினால் சிறை... அதிரடி உத்தரவை போட்ட நாடு News Lankasri

எனது குரல் செட் ஆகவில்லை! ஷங்கர் மகளின் வாய்ப்பு குறித்து வருத்தத்துடன் ராஜலட்சுமி விளக்கம் Manithan
