இலங்கை விமானப்படையின் ஐந்தாம் நாள் வான் சாகசங்கள்
இலங்கை விமானப்படையின் 73வது வருட நிறைவை முன்னிட்டு “வான் சாகசம் – 2024” கண்காட்சி நிகழ்வுகள் யாழ்ப்பாணம் – முற்றவெளி மைதானத்தில் இன்று ஐந்தாவது நாளாகவும் இடம்பெற்றுவருகிறது.
“நட்பின் சிறகுகள்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் கடந்த 06ம் திகதி ஆரம்பமாகிய கண்காட்சி இன்று இரவு 11 மணிரை இடம்பெறவுள்ளது.
இன்றைய நிகழ்வில், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
இதன்போது விமானப்படையின் தளபதி உதேனி ராஜபக்ஷ உள்ளிட்ட விமானப்படையின்
உயரதிகாரிகள் கலந்துகொண்டதோடு, பல்வேறு சாகசங்கள், கலை நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டதுடன் பெருமளவான
பார்வையாளர்களும் திரண்டிருந்தனர்.













இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri