கொழும்பிலுள்ள சீன தூதரகத்தின் கோரிக்கை - பசளை தொடர்பில் மீள் பரிசோதனை
தீங்கு விளைவிக்கும் பக்டீரியா இருப்பதாக தெரிவித்து நிராகரிக்கப்பட்ட சீனாவின் சேதனப்பசளை தொடர்பில் மீள் பரிசோதனையை மேற்கொள்ள இலங்கை அரசாங்கம் இணக்கம் வெளியிட்டுள்ளது.
இந்த விடயத்தை இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச (Shasheendra Rajapaksa) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அங்கீகரிக்கப்படாத ஆய்வுகூடம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட பாிசோதனையை ஏற்க முடியாது என சீனா தெரிவித்துள்ளது.
அத்துடன், மீண்டும் பரிசோதனையை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
16 நாடுகளுக்கு தாம் அனுப்புகின்ற சேதனப் பசளையில் எந்த பிரச்சினையும் இல்லாத போது இலங்கையில் மாத்திரம் தீங்கு விளைவிக்கும் பக்டீரியா கண்டறியப்பட்டமையை ஏற்க முடியவில்லை என்றும் சீனா குறிப்பிட்டுள்ளது.
எனவே நான்காவது பரிசோதனையை மூன்றாம் தரப்பு முன்னிலையில் மேற்கொள்ள வேண்டும் என்று கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் கோரியுள்ளதாக சஷீந்திர ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
கொத்தாக 15 பேர்களைப் பலி வாங்கிய தந்தையும் மகனும்: கடுமையான முடிவெடுக்கும் அவுஸ்திரேலியா News Lankasri
ஈஸ்வரி பற்றி வந்த போன் கால், பதற்றத்தில் நந்தினி, என்ன ஆனது... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam