அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தின் நிலை.. சபையில் அறிவித்த ஜனாதிபதி
இறக்குமதி வரி தொடர்பில் அமெரிக்காவுடன் எந்தவொரு இறுதி ஒப்பந்தமும் எட்டப்படவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று(07) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இரு தரப்பினரும் சில விஷயங்களில் உடன்பாட்டை எட்டியிருந்தாலும், இறுதி ஒப்பந்தம் எதுவும் கையெழுத்திடப்படவில்லை என ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இரு தரப்பு கலந்துரையாடல்கள்
எனினும், இரு தரப்பு கலந்துரையாடல்கள் மூலம் வரி 44 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக குறைக்கப்பட்டது எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், சில HS குறியீடுகளுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடிய பின்னர் ஒரு முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



