விநோத நடவடிக்கையால் பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்கள் - பொலிஸார் வெளியிட்ட முக்கிய தகவல்
களுத்துறையில் இரு இளைஞர்களின் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் அதில் பயணித்த இருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மொரன்துடுவ, கோனதுவ பகுதியில் நேற்று இரண்டு இளைஞர்களின் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
வாதுவ பொதுப்பிட்டிய, பனாபிட்டிய வீதியில் வசிக்கும் 18 வயதுடைய இரு இளைஞர்களே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த இளைஞர்கள் இருவரும் களுத்துறை பண்டாரகம வீதியில் மற்ற இளைஞர்கள் குழுவுடன் வினோத செயற்பாடாக மோட்டார் சைக்கிள்களை ஓட்டியுள்ளனர்.
இதன் போது, அவர்கள் இரண்டு திசையிலும் இருந்து மோட்டார் சைக்கிள்களை ஓட்டிய போது நேருக்கு நேர் மோதியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
உயிரிழந்த இரு இளைஞர்களுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஏனைய இளைஞர்கள் விபத்தின் பின்னர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அதிவேகமே விபத்துக்குக் காரணமென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த இளைஞர்களின் பிரேத பரிசோதனை இன்று களுத்துறை நாகொட பொது வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri
