77ஆவது சுதந்திர தினம்! தமிழ் மொழிமூலம் இசைக்கப்பட்ட தேசிய கீதம்
இலங்கையின் 77ஆவது சுதந்திர தின இன்றும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் தேசிய சுதந்திர தின நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது.
இந்தநிலையில், பிரதான சுதந்திர தின நிகழ்வில் தேசிய கீதம் தமிழ் மொழியில் இசைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
தேசியக் கொடி ஏற்றப்படும் போது, சிங்கள மொழி மூலம் தேசிய கீதம் இசைக்கப்பட்ட நிலையில், அணிவகுப்புக்கள் அனைத்தும் முடிவுற்ற பின்னர் தமிழ் மொழி மூலமும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
கடந்த காலங்களில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வின்போது, ஓரிரு முறைகள் மாத்திரமே தேசிய கீதம் தமிழில் இசைக்கப்பட்டதுடன், கடந்த காலங்களில் அது பேசுபொருளாகவும் சர்ச்சைக்குரிய ஒரு விடயமாகவும் இலங்கை அரசியல் சமூக பரப்பில் பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
