உலகில் உணவு பணவீக்கம் அதிகரித்துள்ள நாடுகளில் இலங்கை 6 வது இடத்தில்
உலக வங்கியின் புதிய புள்ளிவிபரங்களுக்கு அமைய உணவு பணவீக்கம் அதிகரித்துள்ள நாடுகள் இடையே இலங்கை 6வது இடத்தில் உள்ளது. அந்த புள்ளிவிபரங்களுக்கு அமைய இலங்கையின் உணவு பணவீக்கம் 86 வீதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ருவாண்டாவை விட இலங்கையில் உணவு பணவீக்கம் அதிகரிப்பு
உலக வங்கியின் உணவு பாதுகாப்பு தொடர்பான புதிய மதிப்பீடுகளுக்கு அமைய இந்த புள்ளிவிபரம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புள்ளவிபரங்களின் அடிப்படையில் ஈரான், ருவாண்டா மற்றும் சுரினாம் ஆகிய நாடுகள் இலங்கைக்கு அடுத்த மூன்று இடங்களில் இருக்கின்றன.
ஈரான் 7வது இடத்திலும் ருவாண்டா 8வது இடத்திலும் சுரினாம் 9வது இடத்திலும் உள்ளதுடன் இந்த நாடுகளின் உணவு பணவீக்கம் இலங்கையை விட குறைவாக உள்ளது.
அவற்றின் உணவு பணவீக்கம் 84, 41 மற்றும் 40 வீதமாக உள்ளன. உலக வங்கியின் புள்ளிவிபரங்களுக்கு அமைய உலகில் அதிகமான உணவு பணவீக்கம் கொண்ட நாடாக சிம்பாப்வே முதலாவது இடத்தில் உள்ளது.
அந்த நாட்டின் உணவு பணவீக்கம் 321 வீதமாகும். இரண்டாவது இடத்தில் லெபனான் உள்ளது. லெபனானின் உணவு பணவீக்கம் 208 வீதம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.