இந்திய கடலில் அத்துமீறிய இலங்கை கடற்றொழிலாளர்கள்: இந்திய கடற்படையினரின் நடவடிக்கை
சர்வதேச கடல் எல்லைக் கோட்டை தாண்டி கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 14 இலங்கை கடற்றொழிலாளர்களை இந்திய கடற்படை (Indian Navy) கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கடற்பரப்பிற்குட்பட்ட 7 மைல் தொலைவின் தென்கிழக்கு திசையினூடான 13 மைல் தொலைவிலேயே குறித்த கடற்றொழிலாளர்களை கைது செய்துள்ளதாக இந்திய கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, 5 படகுகள் மற்றும் சுமார் 200 கிலோகிராம் அழிந்துவரும் மீன் இனங்கள், கடலட்டைகள் ஆகியன கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது நடவடிக்கை
மேலும், கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் (Jaffna) - பருத்தித்துறையைச் சேர்ந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, குறித்த நபர்கள் நாகப்பட்டினம் கடற்றொழில் துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு வேதாரண்யம் கரையோர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |