நுவரெலியாவில் வசந்த கால நிகழ்வுகள் ஆரம்பம்
நுவரெலியாவில் வசந்த கால விழாவுக்கான பாடசாலை மாணவர்களின் பேண்ட் வாத்திய ஒத்திகை நிகழ்வுகள் இன்று இடம்பெற்றுள்ளன.
நுவரெலியாவில் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் முழுவதும் நுவரெலியா நகரை மையப்படுத்தி வசந்த கால நிகழ்வுகள் இடம்பெறும்.
இந்நிலையில், இவ்வருடமும் எதிர்வரும் 01ஆம் திகதி உத்தியோகபூர்வமாக விழாக்கோலத்துடன் வசந்த கால நிகழ்வுகள் ஆரம்பமாக உள்ளன.
பேண்ட் வாத்திய ஒத்திகை
இதன் முதல் நாள் பாடசாலை மாணவர்களின் வாத்திய குழுவின் வாத்தியத்துடன் இவ்விழா அங்குரார்ப்பணம் செய்வது வழமையாகும்.
இதன் காரணமாக இன்று (22.03.2024) நுவரெலியாவில் உள்ள 10 இற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவ குழுக்களின் பேண்ட் வாத்திய அணிவகுப்பு ஒத்திகை நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் நடைபெற்று விக்டோரியா பூங்கா நுழைவாயில் வரை சென்று நிறைவடைந்துள்ளது.
மேலும், ஏப்ரல் மாத சித்திரை புத்தாண்டு விடுமுறை காலத்தில் அதிகளவான உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை வரவேற்று மகிழ்விக்க சகல ஆயத்தங்களும் நுவரெலியா நகரில் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தி - திவாகரன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |