QR முறையை அரசியலாக்க முயற்சிக்கும் எதிர்த்தரப்புக்கள்.. எழுந்துள்ள குற்றச்சாட்டு
கடந்த ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது அதனை தமது தேவைக்காக பயன்படுத்திய தரப்பினர் இன்று அரசாங்கத்தின் மீது பொய் பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.
மட்டக்களப்பில் இன்றையதினம்(16.3.2026) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டுகருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வளைகுடா நிலைமையினால் ஆசியாவிலேயே அதிக விலையில் எரிபொருள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.
QR முறை
இந்தநிலையில் மிக குறைந்த விலையில் இலங்கையில் மக்களுக்கு எரிபொருள் வழங்கப்படுகின்றது.
எரிபொருள் பதுக்கல் செயற்பாடுகளை தடுப்பதற்கு QR முறை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அத்துடன் இதன்மூலம் பதுக்கல் செயற்பாடுகளை தடுக்கும் வகையிலேயே இது கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
விஜயகுமார் வீட்டில் கொண்டாட்டம்... குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்! வைரல் புகைப்படங்கள் Manithan