இலங்கை கராத்தே சம்மேளனத்தின் பதிவு திடீர் இடைநிறுத்தம்: வெளியான விசேட வர்த்தமானி
இலங்கை கராத்தே விளையாட்டின் தேசிய சங்கமான கராத்தே-டூ சம்மேளனத்தின் பதிவை இடைநிறுத்தி புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஹான் ரணசிங்கவினால் நேற்று (28.08.2023) குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானியின் பிரகாரம், குறித்த சங்கத்தின் செயற்பாடுகளை மேலும் பேணுவதற்காக விளையாட்டுத்துறை அமைச்சர் 09 பேர் கொண்ட குழுவொன்றை தற்காலிக செயற்பாட்டு நடைமுறைக்காக நியமித்துள்ளார்.
விசேட வர்த்தமானி
இதனடிப்படையில் குறித்த குழுவின் தலைவராக சி.ஏ.ஜி.டி சொய்சாவும் செயலாளராக கலாநிதி ஜயலத் இளங்ககோன் நியமிக்கப்பட்டுள்ளார்.
எஸ்.சி.மெதாவத்த, கலாநிதி ஜெயந்தி ஏ. நாணயக்கார, மஹிலினி மையூரன், கே.எம்.சி.குமார, ஆர்.தேவ குமார, ஏ.கே.ஷிரோமி பொன்சேகா, ஏ.ஆர்.எம்.இக்பால் ஆகியோர் குழுவின் எஞ்சிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தின் மேற்பார்வையின் கீழ் அலுவலகப் பொறுப்பாளர்களைத் தெரிவு செய்வதற்கும் தேர்தல் நடத்துவதற்கும் தேர்தல் குழுவொன்றை நியமிக்கும் அதிகாரமும் இந்தக் குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |