சமூக வலைத்தளங்களில் பரவும் குற்றச்சாட்டு - விளையாட்டுத்துறை அமைச்சர் மறுப்பு
தனக்கு பாதணிகளோ அல்லது ஈட்டியோ இல்லை என்றும் போதிய ஆதரவு கிடைக்கவில்லை என்றும் தடகள வீரர் ஒருவர் கூறிய குற்றச்சாட்டுகளை விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே முற்றாக நிராகரித்துள்ளார்.
குறித்த வீரர் ஏற்கனவே தேசிய அணியில் சேர்க்கப்பட்டு, அவருக்கு தேவையான அனைத்து விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
அரசாங்கத்தின் உதவி
இதேவேளை 'மிஷன் ஒலிம்பிக் 2028' திட்டத்தின் கீழ் தடகள வீரர்களுக்கு மாதம் ரூ. 110, 000 முதல் ரூ. 210, 000 வரை நிதி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மேலும் சுமார் 370 வீரர்களுக்கு மாதம் ரூ. 60000 ஊட்டச்சத்து உதவித்தொகையும், 1,500 பாடசாலை மாணவர்களுக்கு மாதம் ரூ. 10,000 உதவித்தொகையும் அரசாங்கத்தால் வழங்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் அரசாங்கத்தின் உதவியைப் பெற்றுக்கொண்டு இதுபோன்ற தவறான தகவல்களை சமூக வலைத்தளங்களிலோ அல்லது ஊடகங்களிலோ பரப்புவது உண்மைக்கு புறம்பானது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22
டன் கணக்கிலானத் தங்கத்தை அமெரிக்காவிலிருந்து வெளியேற்றும் ஐரோப்பிய நாடுகள்: என்ன காரணம் News Lankasri