லண்டனில் நடைபெறவுள்ள ஈழத்தமிழர்களுக்கான கோடைகால விளையாட்டு விழா (Photos)
பிரித்தானியாவின் பல்வேறு பகுதிகளிலும் ஆண்டுதோறும் கோடைகால விளையாட்டு விழாக்கள் நடைபெற்று வருவது வழமை.
அந்தவகையில் தென் கிழக்கு லண்டன் (South east London) மற்றும் கென்ற் (Kent) வாழ் தமிழ் மக்கள் இணைந்து மூன்றாவது வருடமாக மிகப்பிரமாண்டமாக இவ்வருடத்திற்கான விளையாட்டு விழாவை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் எதிர்வரும் (01.07.2023)ஆம் திகதி இந்த போட்டிகளை நடத்துவதற்கு ஏற்பாடுகளை செய்துள்ளதாக அதன் ஏற்பாட்டுக் குழுவினர் அறியத்தந்துள்ளனர்.
அந்தவகையில் 01.07.2023 சனிக்கிழமை காலை 09.00 மணி தொடக்கம் மாலை 19.00 வரை தென்கிழக்கு இலண்டனில் உள்ள பிளம்ஸ்ரெட் (Plumstead) பகுயிலுள்ள Tiviot Rangers Ground (Cottage playing fields, Swingate lane, Pulamsted,SE18 2JD) என்னும் வெளியக மைதானத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்விளையாட்டு விழாக்கான உள்நுளைவுகளுக்கு கட்டணம், விளையாட்டுக்களில் பங்கெடுக்கும் வீர வீராங்கனைகளுக்கான அனுமதிக் கட்டணம் அத்தோடு வாகனதரிப்பு உள்ளிட்ட அனைத்தும் இலவசம் என ஏற்பாட்டுக்குழு அறியத்தந்துள்ளது.
எனவே அன்றைய தினம் நேரத்தை ஒதுக்கி குறிப்பாக Lewisham council, Greenwich council, Bexley council, Bromley Council, Dartford Council, Kent Council, sevenocks council ஆகிய பிராந்தியங்களை சேர்ந்த மக்கள் அனைவரும் இவ்விளையாட்டுவிழா நடைபெறும் இடம் அருகில் இருப்பதால் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இவ்விளையாட்டு விழாவில் பின்வரும் விளையாட்டுக்களை நடத்தவுள்ளதாக ஏற்பாட்டுக்குழுமம் அறியத்தந்துள்ளனர். 》சிறுவர்களுக்கான தடகள விளையாட்டுக்கள். 》பெரியவர்களுக்கான தடகள விளையாட்டுக்கள்.
》ஆண், பெண்களுக்கான தடகள விளையாட்டுக்கள்.
》பெற்றோர்களுக்கான தடகள விளையாட்டுப் போட்டிகள்.
அத்தோடு, ஆண்கள் , பெண்கள் இரு பாலருக்குமான எமது பாரம்பரிய விளையாட்டுக்களான
》கிளித்தட்டு
》முட்டிஉடைத்தல்
》தலையணைசண்டை
》கயிறு இழுத்தல்
》அஞ்சல் ஓட்டம்
போன்ற சுவார்ஸ்யமான விளையாட்டுக்களும் இடம்பெற உள்ளன. மேலதிகமாக நட்புரீதியிலான கழக அணிகளுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டி மற்றும் நட்புரீதியிலான கழக கரப்பந்தாட்டப் போட்டி ஆகியனவும் இடம் பெறவுள்ளது.
பங்கேற்கும் போட்டியாளர்களுக்கான அறிவுறுத்தல்
4 வயது தொடக்கம் 15 வயதுக்குட்பட்ட இரு பாலருக்கும் மூன்று விளையாட்டுக்கள் கொடுக்கப்படும்.
15 வயதுக்கு மேற்பட்டோருக்கு 2 விளையாட்டுக்கள் கொடுக்கப்படும். ஒவ்வோரு விளையாட்டிலும் 1,2,3 என்ற அடிப்படையில் வெற்றி பெறுபவர்களுக்கு வெற்றிக்கிண்ணங்கள் வழங்கப்படுவதுடன், போட்டியில் பங்குகொள்ளும் அனைத்து போட்டியாளர்களுக்கும் பதக்கங்களும் வழங்கப்படும்.
இவ்விளையாட்டு விழாவில் தாயகத்தின் பாரம்பரிய உணவுகள் மற்றும் கூழ் ஆகியன மைதானத்தில் விற்பனை செய்யப்படும். விளையாட்டில் பங்கேற்க விரும்புபவர்கள் இவ்விணையத்தளத்தில் கொடுக்கப்படும் விண்ணப்பப்படிவத்தினை பூர்த்திசெய்து கையளிக்கலாம் அல்லது அஞ்சல்மூலம் அனுப்பி வைக்கலாம்.
அல்லது இவ்இணையத்தளத்தில் கொடுக்கப்படும் QR Code ஐ Scan செய்வதனூடாக இணையத்தினூடாக விண்ணப்பிக்க முடியும். அத்தோடு ஒவ்வொரு வயதினருக்குமான விளையாட்டு விபரம் விண்ணப்பப்படிவத்தில் தரப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க விரும்புவோர் இணையதளம் ஊடாகவோ அல்லது அஞ்சல் ஊடாக முடிவுத்திகதி 29.06.2023 க்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.
விளையாட்டு விழாவாகிய அன்று காலை 09.30 மணிதொடக்கம் 10.30 மணிவரை மட்டுமே பதிவுகள் நடைபெறும். வயதினை உறுதிப்படுத்த pass port அல்லது birth certificate பிரதி ஏற்றுக்கொள்ளப்படும் என ஏற்ப்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.



முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam
