மட்டக்களப்பில் கிராமிய பாடசாலைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு
மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டம் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது, கிராமிய வீதிகள் உட்கட்டமைப்பு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் (sivanesathurai santhirakanthan) பங்குபற்றுதலுடன் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (06.04.2024) நடைபெற்றுள்ளது.
பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரனும் கலந்து கொண்டிருந்தார்.
திறமைகளை வெளிக்காட்டும் மாணவர்கள்
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவில் உள்ள களுதாவளை மகா வித்தியாலயம், தேற்றாத்தீவு மகா வித்தியாலயம் மற்றும் குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு இந்த உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன், இப்பிரதேச பாடசாலை மாணவர்கள் தேசிய மட்டம் மற்றும் மாகாண மட்டத்தில் பல வருடங்களாக தமது திறமைகளை வெளிக்காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |