ஹெரோயின் போதைப்பொருளுடன் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் கைது
கின்னியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் விளையாட்டு பயிற்றுவிப்பாளரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் திருகோணமலை பிராந்திய உத்தியோகத்தர்களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேகநபரை சோதனையிட்டபோது அவரிடம் இருந்து இரண்டு கிரேம் 330 மில்லி கிரேம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும்,பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் தீவிர விசாரணை
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மூதூர் பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் விளையாட்டு பயிற்றுவிப்பாளராக கடமையாற்றி வரும் 27 வயதுடைய நபரெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை ஹெரோயின் போதைப்பொருளுடன் திருகோணமலை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரை திருகோணமலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை
எடுத்துள்ளதாகவும் புலன் விசாரணைகளை முன்னெடுத்து
வருவதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri