யாழில் பிரம்மாண்டமாக இடம்பெறவுள்ள பிரீமியர் லீக் கிரிக்கெட் சுற்றுப்போட்டி
பிறைடஸ் பிரீமியர் லீக்-2022 கிரிக்கெட் சுற்றுப்போட்டி மிகச் சிறப்பான வகையில் யாழ் மாவட்டத்தில் நடாத்த திட்டமிட்டுள்ளது.
இந்த சுற்றுப்போட்டிக்கான பிரதான அணுசரணையை IBC தமிழ் ஊடக வலையமைப்பு வழங்கியுள்ளமை குறிப்பிடத் தக்கது.
தமிழி அமைப்பின் ஏற்பாட்டில் யாழ் மாநகர சபை இனை அனுசரனையுடனும் யாழ் மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் அனுமதியுடனும் இந்த சுற்றுப்போட்டியானது நடாத்த திட்டமிட்டப்பட்டுள்ளது.
இந்த சுற்றுப்போட்டியில்180 க்கு மேற்பட்ட வீரர்களுடன் 12 அணிகள் பங்குபற்றுகிறன.
இந்த சுற்றுப் போட்டியானது தொழில்முறையானதாக அமைவதுடன் யாழ் மாவட்ட துடுப்பாட்ட வீரர்களை பொருளாதார ரீதியில் ஊக்குவிப்பதற்கும் முயற்சிக்கின்றது.
இதற்கமைய எதிர்வரும் ஆகஸ்ட் மாத இறுதி பகுதியில் இந்த போட்டிகள் ஆரம்பமாகி செப்டம்பர் மாதம் வரையில் நடத்துவதற்கு திட்டமிட்ப்பட்டுள்ளது.
பிறைடஸ் பிரீமியர் லீக் சுற்றுப்போட்டியின் பரிசுத்தொகை விபரம்
வெற்றியாளர் 1000000.00/=
இரண்டாம் இடம் : 500000.00/=
மூன்றாம் இடம்: 200000.00/=
நான்காவது இடம்: 100000.00/=