யாழ். பல்கலைக்கழகத்தின் பெயர் பலகையில் உள்ள எழுத்துப் பிழை திருத்தம்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தின் நுழைவாயில் வளைவானது புதிதாக நிர்மாணிக்கப்பட்டது.
இந்நிலையில் அதில் எழுதப்பட்ட சொல்லில் எழுத்துப் பிழை காணப்பட்டது.
குறித்த விடயமானது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியது.
எழுத்துப் பிழை திருத்தம்
அதனைத் தொடர்ந்து அந்த எழுத்துப் பிழையானது திருத்தம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி அறிவியல் நகர் வளாக நுழைவாயிலில் இருந்த பெயர் பலகையில் "யாழ்பாணப் பல்கலைக்கழகம்" என எழுத்துப் பிழையுடன் எழுதப்பட்டிருந்தது.
இது "யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்" எனத் திருத்தப்பட வேண்டும் எனத் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி துணைவேந்தருக்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
விஜய்க்கு தொடரும் சிக்கல்.. அப்போ புரியல, இப்போ புரியுது! ரஜினி பற்றி நடிகை கஸ்தூரியின் பதிவு Cineulagam