யாழ் கொம்மந்தறையில் இடம் பெற்ற பழைய மாணவர்களின் சிறப்பு நிகழ்வு
யாழ்.கொம்மந்தறை கம்பர்மலை வித்தியாலயம் 1997 ஆம் ஆண்டு பழைய மாணவர் சங்கத்தினரால் பூபாள ராகங்கள் என்ற வரலாற்று நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு இவ் வருடம் பழைய மாணவர் சங்கத்தினரால் மே மாதம் 22 ஆம் திகதி பாடசாலை மைதானத்தில் நடத்தப்பட்டுள்ளது.
இரவு நேர ஊடரங்கு உத்தரவு நடைமுறையில் இருந்த காலப்பகுதியில் பாடசாலைக்கு வந்தவர்கள் வெளியில் செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடுகளுடன் கூடிய இராணுவ அனுமதியுடன் முழுநேர இரவு நிகழ்வாக நடந்து முடிந்தது.
பூபாள ராகங்கள் 25 ஆவது ஆண்டை நினைவு கூறும் முகமாக பாடசாலையுடன் கூடிய கொம்மந்துறை ஸ்ரீ மனோன்மனி அப்பன் ஆலயத்தில் சிறப்பு பூசை வழிபாடுகளும்,பூபாள ராகங்கள் நினைவாக 25 மரக்கன்றுகளும் நடப்பட்டதோடு, பூபாள ராகங்கள் அனுபவம் பகிர்வுடன் கூடிய கருத்தமர்வும் சிறப்பாக நடந்தேறியுள்ளது.
பூபாள ராகங்கள் விழாக்குழுவினர் பாடசாலை சமூகத்தினருடன் இணைந்து நினைவு நாளை சிறப்பாக செய்தமை குறிப்பிடத்தக்கது.









சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam
