அனைத்து வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோருக்கு சிறப்பு சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியீடு
நாடு முழுவதும் அமைந்துள்ள பொருளாதார மையங்களுக்கு வருகை தரும் அனைத்து வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோருக்கு சுகாதார அமைச்சகம் இன்று சிறப்பு சுகாதார வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள 16 பொருளாதார மையங்களுக்கு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னி யாராச்சியின் ஆலோசனையின் படி இந்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அமைச்சில் இன்று நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.நாட்டின் பல பகுதிகளிலிருந்து பெருமளவிலான பொருட்கள் பொருளாதார மையங்களுக்கு கொண்டு வரப்படுகின்றன.
இதன் விளைவாக, இந்த பொருளாதார மையங்கள் மூலம் கொடிய வைரஸ் முழு நாட்டிலும் பரவக்கூடிய ஆபத்து உள்ளது.
எனவே கடுமையான சுகாதார நடைமுறைகளுக்கு அமைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் இதன்போது கூறியுள்ளார்.
இன்று எடுக்கப்பட்ட தீர்மானங்களின் படி,கொரோனாவை கட்டுப்படுத்த ஒவ்வொரு பொருளாதார மையத்திற்கும் ஒரு தனிப்பட்ட திட்டத்தை வரையவும்,அந்த திட்டங்களை செயல்படுத்துவதை மேற்பார்வையிட ஒரு அதிகாரியை நியமித்தல், பொருளாதார மைய வளாகத்தை ஒரு வழக்கமான அடிப்படையில் பராமரித்தல்,பொருளாதார மையத்திற்கு வருகை தரும் மக்களுக்கு உணவு உண்ணக்கூடாது,துப்பக்கூடாது மற்றும் வெற்றிலை எச்சில்களை வளாகத்தில் துப்பக்கூடாது என்ற அறிவூட்டலை வழங்குதல்,தூரத்தை பராமரிப்பை உறுதிப்படுத்துதல்,குப்பைகளை முறையாக அகற்றுவது,வாடிக்கையாளர்களுக்கு பி.சி.ஆர் சோதனைகளை மேற்கொள்ளுதல் மற்றும் பொருளாதார மையத்திற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கை கழுவும் வசதிகளை வழங்குதல் என்பன இந்த வழிகாட்டுதல்களில் அடங்கியுள்ளன.