கொட்டகலையில் மாதாவிடாயும் சுகாதாரமும் தொனிப்பொருளில் விசேட செயலமர்வு
மனித அபிவிருத்தி ஸ்தாபனத்தின் ஏற்பாட்டில் கொட்டகலை பொது சுகாதார அதிகாரி பிரயன் தலைமையில் மாதாவிடாயும் சுகாதாரமும் என்ற தொனிப்பொருளிலான விசேட கருத்தரங்கு கொட்டகலை கிருஸ்லஸ்பார்ம் தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு இடம்பெற்றது.
70 மாணவர்கள் கலந்துக்கொண்ட இந்த கருத்தரங்கில் பெண்கள் மாதாவிடாய் காலத்தில் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் மற்றும் அவர்கள் அக்காலப்பகுதியில் கடைபிடிக்க வேண்டிய சுகாதார பழக்க வழக்கங்கள் தொடர்பிலும் தெளிவூட்டப்பட்டது.
மேலும் இது தொடர்பிலும் ஆண் மாணவர்களும் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும்.அப்போதுதான் ஆண்,பெண் சமத்துவம் சமூகத்தில் காணப்படுமென ஆண் மாணவர்களும் இச்செயலமர்வில் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.
இதன்போது பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட மனித அபிவிருத்தி ஸ்தாபனத்தின் நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் பொன்னையா ஸ்ரீகாந்த் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |