சிறுவர் உரிமைகளை பாதுகாப்போம்: தமிழர் பகுதியில் விசேட நடைபவணி(Video)
முல்லைத்தீவு-ஒட்டுசுட்டான்,புதுக்குடியிருப்பு பிரதேசங்களில் சிறுவர் உரிமைகளை பாதுகாக்க கோரி விசேட விழிப்புணர்வு நடைபவணிகள் இடம்பெற்றுள்ளன.
குறித்த விழிப்புணர்வு நடைபவணியானது இன்று (24.08.2023) காலை நடைபெற்றுள்ளது.
சிறுவர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு சிறுவர் உரிமைகளை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளிலான விழிப்புணர்வு பேரணியினை ஒட்டுசுட்டான் பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ம.வினோத் ஆரம்பித்து வைத்துள்ளார்.
ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட குறித்த பேரணியானது நடைபவணியாக சென்று ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தில் நிறைவு பெற்றிருந்தது.
மேலும், சிறுவர் மீதான துண்புறுத்தல்களை கண்டால் 1929 க்கு அழைப்போம், குழந்தைகள் பாலியல் பொருட்கள் அல்ல, சிறுவர்களை தீய வார்த்தைகளால் பேசுவதை தடுப்போம், சிறுவர்களை மது போதை அடிமையிலிருந்து மீட்போம், வன்முறைகளில் இருந்து சிறுவர்களை நாம் பாதுகாப்போம் போன்ற பல்வேறு விழிப்புணர்வு பதாதைகளுடன் நடைபவனி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்தி - சான்
புதுக்குடியிருப்பில் ஆரம்பமான பேரணி
இதேவேளை புதுக்குடியிருப்பு பிரசேத சபை முன்பாக இருந்து ஆரம்பமான கவனயீர்ப்பு பேரணியும், புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு பகுதியில் இருந்து ஆரம்பமான கவனயீர்ப்பு பேரணியும் புதுக்குடியிருப்பு சந்தியினை சென்றடைந்து அங்கிருந்து கவனயீர்ப்பினை வெளிப்படுத்தியவாறு புதுக்குடியிருப்பு பிரதேசசெயலம் சென்றடைந்துள்ளது.
மேலும், சிறுவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யகோரி கோரிக்கைகள் அடங்கிய மனு வாசிக்கப்பட்டு பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதில் சுமார் 500 வரையான சிறுவர்கள் பெரியவர்கள் வரை கலந்து கொண்டுள்ளனர்.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அதிகரிக்கும் சிறுவர் துஸ்பிரயோகத்தினை கட்டுப்படுத்த கோரி புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந் அவர்களிடம் மனு கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக செய்தி - கீதன்










