விசேட தொடருந்து சேவையை இயக்க திட்டம்
எதிர்வரும் 11ஆம் திகதி முதல் விசேட தொடருந்து சேவையை இயக்க தொடருந்து திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
இந்த விசேட தொடருந்து சேவை இரண்டு கட்டங்களாக இயக்கப்படும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டிற்காக சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விசேட தொடருந்துகளை இயக்க நடவடிக்கை
அதன்படி 11, 12 மற்றும் 13ஆம் திகதிகளில் கொழும்பிலிருந்து பதுளை, அநுராதபுரம், காலி, கண்டி மற்றும் பெலியத்த ஆகிய பகுதிகளுக்கு விசேட தொடருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் புத்தாண்டு நிறைவடைந்து கொழும்பு திரும்பும் மக்களுக்காக எதிர்வரும் 18, 19 மற்றும் 20ஆம் திகதிகளில் விசேட தொடருந்து சேவைகள் இயக்கப்படும் என்றும் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், புத்தாண்டுக்காக சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக, இலங்கை போக்குவரத்து சபை 9ஆம் திகதி முதல் மேலதிகமாக 500 பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 12 மணி நேரம் முன்

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
