புகுடு கண்ணாவின் நெருங்கிய நண்பர் விசேட அதிரடிப்படையினரால் கைது
கஹதுடுவ- பொல்கசோவிட்ட பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, போதை பொருள் வர்த்தகரும் திட்டமிட்ட குற்றசெயல்களை புரிபவருமான 'புகுடு கண்ணா'வின் நெருங்கிய நண்பர் ஒருவரை, விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
13 கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட குறுந்தகடு

சந்தேகநபரிடம் இருந்து வேறு நபர்களின் பெயரில் பதிவு செய்யப்பட்ட இரண்டு சாரதி அனுமதிப்பத்திரங்களும், சந்தேகநபரின் நடவடிக்கைகள் தொடர்பான குறுந்தகடு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.
நீதிமன்ற நடவடிக்கை
சந்தேக நபர் திட்டமிட்ட குற்றச் செயல்கள் மற்றும் கொலைக்கு உதவி செய்தமை தொடர்பில் தேடப்பட்டு வந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
38 வயதான சந்தேக நபர் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில்
முன்னிலைப்படுத்துவதற்காக கஹதுடுவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
Bigg Boss 10: பாத்ரூமில் டிடிஎஃப் வாசன் செய்த திருட்டுத்தனம்! தெரியாமல் ஆட்டம் போட்ட போட்டியாளர்கள் Manithan
பிரபல நடிகரின் படத்தில் நாயகியாக நடிக்கப்போகும் சீரியல் நடிகை டெல்னா டேவிஸ்... பூஜை போட்டோ.. Cineulagam