வரவு செலவுத்திட்டத்தின் மக்களின் முன்மொழிவு தொடர்பில் விசேட செயலமர்வு (Photos)
2022 ஆம் ஆண்டுக்கான மிகச்சிறந்த முறையிலான வரவுசெலவுத்திட்டத்தின் மக்களின் முன்மொழிவு தொடர்பில் விசேட செயலமர்வொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த செயலமர்வு இன்று யாழ். மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் (Ganapathipillai Mahesan) தலைமையில் இடம்பெற்றது.
இந்த செயலனர்வானது வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் மற்றும் புத்தசாசன மதவிவகார கலாச்சார அலுவல்கள் அமைச்சின் செயலகமும் ஒருங்கிணைந்த எற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.
வரவுசெலவுத்திட்டத்தின் மக்களின் முன்மொழிவுகளுக்கு எற்ப திட்டங்களினை உருவாக்கும் நோக்கத்தினை ஊடகங்கள் மக்களுக்கு தெளிவுப்படுத்தல் தொடர்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களின் கீழ் கடமையாற்றும் அரச தகவல் திணைக்கள பதவிநிலை அலுவல்கள் உத்தியோகத்தர்கள், மாவட்ட ஊடகவியாளர்கள், மற்றும் பல்கலைக் கழகங்களில் ஊடகவளங்கள் பயிற்சியினை கற்றுவரும் மாணவர்களுக்கு தெளிவூட்டப்பட்டுள்ளது.
இதன்போது புத்தசாசன, மதவிவகார கலாச்சார அலுவல்கள் அமைச்சின் சிரேஸ்ட ஊடகச்செயலாளர் ஜெ.யோகராஜ், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபாவதி கேதீஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் வ.விமலநாதன், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் வின்சன் வின்சிலின் மேலதிக அரசாங்க அதிபர்கள், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் திருமதி மோகனேதாஸ் உள்ளிட்ட அரச தகவல் திணைக்கள பதவிநிலை அலுவல்கள் உத்தியோகத்தர்கள்மாவட்ட ஊடகவியாளர்கள் மற்றும் பல்கலைக் கழகங்களில் ஊடகவளங்கள் பயிற்சியினை கற்றுவரும் மாணவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.






தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri
