கல்முனை மாநகர சபையின் சேவைகள் தொடர்பான முறைப்பாடுளுக்கு விசேட கருமபீடம்
கல்முனை மாநகர சபையின் சேவைகள் தொடர்பான முறைப்பாடுகளை பொது மக்களிடமிருந்து உடனுக்குடன் பெற்றுக் கொள்வதற்காக அழைப்பு நிலையம் (Call Centre) எனும் விசேட கருமபீடம் ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீபின் வழிகாட்டலில் கல்முனை மாநகர சபையின் பழைய கட்டிடத்தொகுதியில் நிறுவப்பட்டுள்ளது.
சேவைகள்
இந்த நிலையத்தில் பொது மக்கள் தமது முறைப்பாடுகளை அலுவலக நேரத்தில் 0672030000 எனும் இலக்கத்திற்கோ அல்லது நேரடியாக வருகைதந்து வாய்மூலமாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ தெரிவிக்க முடியும்.

| கல்முனை மாநகர ஆணையாளருக்கு எதிராக பிடியாணை உத்தரவு |
திண்மக்கழிவகற்றல் சேவை, தெருவிளக்கு பராமரிப்பு, வடிகாள் பராமரிப்பு உட்பட மாநகர சபையினால் முன்னெடுக்கப்படுகின்ற எந்தவொரு சேவை தொடர்பிலும் இவ்வாறு முறைப்பாடளிக்க முடியும்.
பொது மக்களின் ஒத்துழைப்பு
கோவிட் பெருந்தொற்று, எரிபொருள் தட்டுப்பாடு உட்பட நாட்டின் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு,பொது மக்கள் சிரமமின்றி இலகுவாகவும் விரைவாகவும் தமது முறைப்பாடுகளை முன்வைத்து, உரிய தீர்வுகளை பெற்றுக்கொள்ளும் பொருட்டு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அழைப்பு நிலைய(Call Centre) கரும பீடத்தை கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பொது மக்கள் முறையாக பயன்படுத்தி, ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri