பொதுத் தேர்தல் வாக்களிப்பு முறை தொடர்பில் விசேட அறிக்கை
எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது தமக்கு உரித்தான வாக்குச் சாவடியில் வாக்களிக்க முடியாத அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளோருக்கு வேறொரு வாக்குச் சாவடியில் வாக்களிக்க வசதி செய்யப்படவுள்ளது.
இது தொடர்பான அறிவித்தல் ஒன்றை தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ளது.
அதன் பிரகாரம் தமக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் வாக்களிக்க முடியாதவாறு நியாயமான அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ள எந்தவொரு வாக்காளரும் இது தொடர்பில் விண்ணப்பிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.
வாக்குச் சாவடி
மேலும், அவர்களுக்கு வேறொரு வாக்குச் சாவடியில் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படவுள்ளது.
அவ்வாறு விண்ணப்பிக்க விரும்பும் வாக்காளர்கள் 2024ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலின் பிரகாரம் தங்கள் கிராம அலுவலரிடம் உறுதிப்படுத்திக் கொண்ட விண்ணப்பமொன்றை அந்தந்த மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலரிடம் சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 5 நாட்கள் முன்

பிக் பாஸ் 9 முதல் எலிமினேஷன் இவர்தானா.. Voting-ல் அதிகம் வாக்குகள் பெறுவது யார் தெரியுமா? Cineulagam

எதர்சையாக சீதா-மீனாவிற்கு தெரியவந்த அருண் பற்றிய உண்மை, முத்து தான் செய்தாரா?... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
